காரியசித்தியோ கர்த்தரால் வரும்

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும் (நீதி 16:33).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.நீங்கள் ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் உங்களுடைய வாழ்க்கையில் நடை பெரும் எந்த காரியங்களும் ராசிகளின் அடிப்படையிலோ, விதியின் அடிப்படையிலோ நடை பெறுவதில்லை மாறாக உங்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் சகல காரியங்களும் தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவே  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தேவனுடைய சீட்டு உங்களுடைய மடியிலே போடப்படும் ஆகவே தேவனுடைய சித்தம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும் படியாக நீங்கள் ஜெபிக்க வேண்டும், உங்களுடைய சித்தத்துக்கு ஏற்ற பிரகாரம் தேவன் தம்முடைய சித்தத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கக் கூடாது.சிலர் நினைப்பது தங்களுடைய சுய பலத்தினால், தங்களுடைய சுய முயற்சியினால் , தங்களுடைய சுய ஞானத்தினால் காரியத்தை சித்திக்க முடியும் என்று, ஆனால் வேதம் சொல்லுகிறது ‘காரியசித்தியோ கர்த்தரால் வரும்’ என்று.ஆதலால் உங்களை சிருஷ்டித்த கர்த்தர் மேல்  உங்களுடைய விசுவாசத்தை வைத்து வாழ்க்கையில் முயற்சி எடுப்பீர்களானால் கர்த்தர் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். காரியசித்தியோ கர்த்தரால் வரும்.ஆமென் ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?