தேவன் இயேசுவுக்கு உங்கள் இருதயத்தில் இடம் கொடுப்பீர்களா?

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3 :20 ).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! தேவன் மனிதர்களை சிருஷ்டித்தது அவர்களோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளும் படியாகத்தான், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுடைய இருதயத்தின் வாசற்படியிலே நின்று உங்களுடைய இருதயத்தின் கதவை அவருக்காக திறக்கும் படி தட்டுகிறார், நீங்கள் அவருடைய சத்தத்தை கேட்டு உங்களுடைய இருதயத்தின் கதவை அவருக்காக திறப்பீர்களானால் தேவன் உங்கள் இருதயத்துக்குள் பிரவேசித்து உங்களோடு போஜனம் பண்ணுவார் , நீங்களும் அவரோடு போஜனம் பன்னுவீர்கள்.உங்களுடைய இருதயத்தில் தேவன் இயேசுவுக்கு நீங்கள் இடம் கொடுப்பீர்களானால் தேவன் உங்கள் வாழ்க்கையை சந்தோஷத்தினாலும், நிம்மதியினாலும், சமாதானத்தினாலும் நிரப்பி ஆசீர்வதிப்பார்.ஆமென் ! தேவன் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும்  ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?