மனுஷனுடைய இருதயம் கர்த்தருடைய கரத்தில் நீர்க்கால்கள் போல் இருக்கின்றது

ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார் (நீதி 21 :1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! மனுஷருடைய இருதயங்கள் கர்த்தருடைய கையில் இருக்கின்றது.மனுஷடய மனதை கர்த்தரால் தம்முடைய இஷ்டத்தின் பிரகாரமாக மாற்ற முடியும்.கர்த்தருக்கு சித்தமான காரியம் வாய்க்கும்.விவசாயம் பண்ணுகிறவர் நீர்க்கால்களைத் திருப்புவது போல் கர்த்தர் மனுஷரின் யோசனைகளை திருப்புகிறார். நீர்க்கால்கள் ஒரு திசையில் ஓடும் போது விவசாயி அதன் திசையைத் திருப்பி தனக்கு இஷ்டமான இடத்தில தண்ணீரை பாய செய்கிறார். மனுஷன் தன்னுடைய சித்தத்தின் பிரகாரம் யோசிக்கிறான்.தன் விருப்பத்தின் பிரகாரம் கிரியை செய்கின்றான்.மனுஷனுடைய சித்தம் எதுவாக இருந்தாலும் தேவனுடைய சித்தமே வாய்க்கும்.தேவனுடைய நோக்கமே நிறைவேறும்.தேவன் செய்ய நினைத்திருக்கிற காரியம் தடைபடாது.மனுஷனுக்கு சுயாதீன சித்தம் இருந்தாலும் அது தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்பட்டுதான் கிரியை செய்யும். ராஜாவின் இருதயம் கர்த்தருடைய கரத்தில் நீர்க்கால்கள் போலிருக்கிறது.விவசாயி தன்னுடைய சித்தத்தின் படி நீர்க்கால்களை திருப்புவது போல் கர்த்தரும் ராஜாவின், அதிகாரிகளின். மனிதர்களின் யோசனைகளை தன்னுடைய சித்தத்தின் படி திருப்புகிறார். தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்ய நினைத்திருக்கிற காரியம் தடைபடாது என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அல்லேலூயா! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?