உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் (சங் 138:2). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய கிருபையின் நிமித்தமும், அவருடைய உண்மையின் நிமித்தமும் நாம் அவருடைய நாமத்தை துதிக்க வேண்டும். வாக்கு கொடுத்த தேவன் உண்மை யுள்ளவராக இருக்கிறார். கர்த்தர் தமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவர் தமது வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார். தாவீதுக்கு துன்பங்களும், வேதனைகளும், உபத்திரவங்களும் வந்து நெருக்கப்படட போது அவருடைய ஆத்துமா பெலனிழந்து போய் தன்னுடைய சரீரத்திலும், ஆவியிலும் சோர்ந்து போனார், அவரால் வேதனைகளையும், துன்பங்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தேவனை நோக்கி கூப்பிடட போது கர்த்தர் அவர் ஆத்துமாவில் பெலன் தந்து அவரை தைரியப்படுத்தினார். கர்த்தர் நம்முடைய ஆத்துமாவுக்கு பெலன் தரும் போது நம்மால் வேதனைகளையும், துன்பங்களையும் தாங்கிக் கொள்ள முடியும்.கர்த்தர் நமக்கு ஆத்துமாவில் பெலத்தை தரும் போது சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும், விசுவாசத்தினாலும் நிரப்பப்படுகிறோம். தாவீதைப்போல, நமக்கும் ‘கர்த்தரை நோக்கி கூப்பிடும்‘ போது அவர் நமக்கு மறு உத்தரவு அருளுவார் என்கிறதான விசுவாசம் தேவைப்படுகிறது. பிரியமானவர்களே! கர்த்தர் உங்களுக்கு மறு உத்தரவு அருளியத்துக்காகவும், அவர் உங்கள் வாழ்க்கையில் செய்த, செய்து கொண்டிருக்கின்ற, செய்யப்போகின்ற நன்மைகளுக்காக நீங்கள் கர்த்தரை துதிக்க வேண்டும். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen.
ReplyDelete