வருஷத்தை தம்முடைய நன்மையினால் முடி சூட்டும் தேவன்

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ( சங் 65 :11 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.தேவன் தாம் சிருஷ்டித்த ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆயுசு நாட்களை கூட்டிக் கொடுப்பதோடு ஒவ்வொருவருடைய  வருஷத்தையும் அவருடைய நன்மையினாலும் , கிருபையினாலும் முடி சூட்டுகிறார்.நன்மை என்பதற்கு, "நல்ல பங்கு" அல்லது "உயர்ந்த ஈவுகள்" என்பது அர்த்தமாகும்.உங்களுக்குத் தம்முடைய நல்ல ஈவுகளாகிய நன்மைகளைச் சம்பூரணமாக் கொடுக்க தேவன் விரும்புகின்றார். உங்களுடைய இருதயம் எந்த அளவுக்கு சுத்தமாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு, நீங்கள் தேவனுடைய நன்மையையும், கிருபையையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக் கொள்ளுவீர்கள். தாவீது ராஜாவின் இருதயம் சுத்தமாக இருந்ததினாலும், அவர் தேவனை நேசித்ததாலும் அவருடைய  ஜீவனுள்ள நாளெல்லாம் தேவனுடைய நன்மையும் கிருபையும் அவரைத் தொடர்ந்தது (சங். 23:6). நீங்களும் தாவீதை போல சுத்த இருதயத்தோடு தேவனை நேசிப்பீர்களானால் தேவன் உங்கள் ஆயுசு நாட்களை நன்மையினாலும், கிருபையினாலும் முடிசூட்டி உங்களை ஆசிர்வதிக்க அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?