அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும், பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:17 & 18). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்கள தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையிலே யோவானுக்கு தரிசனம் கொடுத்த போது, செத்தவனைப்போல அவரது பாதத்தில் விழுந்து கிடந்த யோவான் மேல் தம்முடைய வலது கரத்தை வைத்து, அவரை நோக்கி அன்போடு பயப்படாதே என்று சொல்லி தம்மை பற்றிய வெளிப்பாடடை யோவானுக்கு வெளிப்படுத்தினார். (1) நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன் - இந்த வாக்கியத்தை இயேசு கூறுவதன் மூலமாய் தன்னுடைய தெய்வீக வெளிப்பாடடை வெளிப்படுத்துகிறார். (2) மரித்தேன் - இந்த வார்தையைக் கூறுவதன் மூலமாய் மனித குலத்தின் பாவங்களுக்காய், அக்கிரமங்களுக்காய், மீறுதலுக்காய் தான் கல்வாரி சிலுவையில் நொறுக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி உலகத்திலுள்ள எல்லா ஜனங்களுக்குமாக தான் மரித்ததை இயேசு கூறுகிறார். (3) ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென் - இந்த வார்த்தையை இயேசு கூறுவதன் மூலமாய் தான் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து மரணத்தை வென்று தான் சாதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற நித்திய ஜீவனுள்ளவர் என்பதை வெளிப்படுத்துகிறார். (4) நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் - என்ற வார்தையைக் கூறுவதன் மூலமாய் தனக்கு மரணத்தின் மீதும், பாதாளத்தின் மீதும் இருக்கிற சர்வ அதிகாரத்தை இயேசு கூறுகிறார். அல்லேலூயா ! தேவனுக்கு மகிமை உண்டாவதாக. இவ்வளவு பெரிய தேவனை கடவுளாக கொண்டிருக்கிற நீங்களும், நானும் பாக்கியவான்கள். வாழ்க்கையில் என்னதான் புயல் அடித்தாலும் எதைக்குறித்தும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சகல காரியங்களும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. புயலை அமைதிப்படுத்த அவரால் முடியும். அல்லேலூயா ! ஒருவேளை நீங்கள் இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொள்ளாதிருப்பீர்களானால் இப்போதே கால தாமதம் பண்ணாமல் உங்களுடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து சதா சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து அவரை உங்களுடைய கடவுளாகவும், இரச்சகராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment