உத்தமனனும், மாறுபாடுள்ள இருதயமுள்ள மனிதனும்

உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான் (நீதி 28 : 18). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.உத்தமனனாய் நடக்கிறவன், மாறுபாடான மனமுள்ளவன் என்று இரண்டு விதமான நபர்களைக் குறித்து வாசிக்கின்றோம்.முதலில் மாறுபாடான இருதயமுள்ள மனிதனைக் குறித்து தியானிப்போம், மாறுபாடான மனமுள்ளவன் இரு வழிகளில் நடக்கிறவனாய் இருக்கிறான், இவனிடத்தில் உண்மையும், நேர்மையும் இருக்காது,இவன் மாய்மாலமுள்ளவனாய் இருப்பான், அதாவது வெளிவேஷம் போட்டு மற்றவர்களை ஏமாற்றுகிறவன், அவனுக்குள் தெளிந்த சிந்தனை இருக்காது, எப்போதும் குழப்பமடைந்த நிலையில் காணப்படுவான், அவனால் எந்த வழி நல்ல வழி என்பதை இனம் கண்டு கொள்ள முடியாதவனாய் இருப்பதினால் எல்லா வழிகளிலும் செல்வான்,இவனோடு கர்த்தர் இல்லாததினால் அவருடைய பாதுகாப்பும் இவனுக்கு இருக்காது, முடிவில் எங்கோ ஒரு படு குழியில் விழுந்து தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக் கொள்ளுவான் ஆனால் உத்தமனாய் நடக்கிறவனோடு கர்த்தர் இருப்பதால் அவனுக்கு எப்போதும் கர்த்தருடைய பாதுகாப்பு கிடைக்கும், ஒருவேளை அவனுக்கு ஆபத்து நேரிடடாலும் கூட கர்த்தர் அவனை அவன் சூழ்நிலையில் இருந்து விடுதலை செய்து அவனை இரட்சிப்பார்.ஆமென் ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?