கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங் 107 :1 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தரே சர்வ சிருஷ்டிக்கும் தேவனாகவும், சர்வலோகத்திட்கும் அதிபதியாகவும் இருக்கிறார்,அவரே எல்லா மனுஷருக்கும் பரலோக பிதாவாகஇருக்கிறார். அவர் மனுபுத்திரர் எல்லாரையும் பராமரித்து வருகிறார்,ஆபத்து வேளைகளில் மனுஷருக்கு அனுகூலமான துணையாய் இருக்கிறார், அவர் மனுஷர்களுடைய தேவைகளை சந்தித்து வருகிறார், வியாதிகளை நீக்கி அவர்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறார், ஆற்றி தேற்றி அரவணைக்கிறார் மற்றும் ஒவ்வொருவருடைய ஜெபத்துக்க்கும் பதில் கொடுத்து வருகிறார்.அவர் நம்முடைய வாழ்க்கையில் நல்லவராகவே இருக்கிறார், அவருடைய இரக்கம், கிருபை, அன்பே நம்மை இன்று வாழ வைக்கின்றது.அவரே மனுபுத்திரர்களின் பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதலுக்காக அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மனுஷ குலத்தை மீட்டு எடுத்தார்.அவர் மனுஷர்களுக்கெல்லாம் நல்லவராக இருக்கிறார்.அல்லேலூயா ! ஆகவே அவருடைய சிருஷ்டிப்பான நாம் ஒவ்வொருவரும் கர்த்தர் செய்த நன்மைகளுக்காக , செய்யப்போகின்ற நன்மைகளுக்காக அவரை புகழ்ந்து போற்ற வேண்டும், அவரை நம்முடைய வாழ்க்கையில் உயர்த்தி மகிமை படுத்த வேண்டும்,அவரை துதித்து ஆராதிக்க வேண்டும். அல்லேலூயா ! கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.அந்த நல்ல தேவனை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளாது இருப்பீர்களானால் , தாமதியாது இப்போதே அவரை உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக, ரச்சகராக ஏற்றுக்கொண்டு உங்களுடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணியுங்கள்.கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen .
ReplyDelete