தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல 3:27). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.யூதா ஜனங்கள் பாபிலோனிய மன்னனினால் பாபிலோனுக்கு சிறை பிடித்து கொண்டு சென்ற போது பெரியோர்களுடன் வாலிபர்களும், சிறுவர்களும் கொண்டு செல்லப்படடார்கள்.இளம்பிராயத்தில் இருந்தவர்களுக்கு தங்களுடைய இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் கர்த்தர் அவர்களுடைய நுகத்தை இறக்கி வைக்கும் போது கர்த்தருடைய பராமரிப்பையும், இரக்கத்தையும், கிருபையையும், அன்பயையும், இரட்சிப்பையும் புரிந்து கொண்டு கர்த்தர் விண்ணப்பத்துக்கு பதில் கொடுத்தார், கர்த்தர் தங்களை மறக்கவில்லை, கைவிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறார்கள், இதனால் இவர்கள் விசுவாசத்தில் இன்னுமாய் பலப்படுகிறார்கள். ஆம் பிரியமானவர்களே, இளம்பிராயத்தில் எத்தனை பாடுகள்? கர்த்தர் ஏன் இந்த பாடுகளை என் இளவயதில் அனுமதித்தார் என்று கவலையோடு சோர்ந்து போய் இருக்கிறீங்களா? ஒன்றை மாத்திரம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், சகலதும் கர்த்தருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது, அவர் உங்களை வெட்கப்பட்டு போக விட மாடடார். இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது கடினமாகத்தான் இருக்கும் ஆனால் அது தான் நமக்கு நல்லது. கர்த்தர் உங்களது நனமைக்காகத்தான் உங்களது இளம்பிராயத்தில் உங்களது வாழ்க்கையில் பாடுகளை அனுமதித்திருக்கிறார்.கர்த்தர் உங்கள் மீது நுகத்தை வைக்கும் போது பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். சோர்ந்து போய் விடாதீர்கள்,கர்த்தர் மீது நீங்கள் வைத்திருக்கிற உங்களுடைய விசுவாசத்தை விட்டு விலகி வீணான சிந்தனைக்கு உங்களது இருதயத்தில் இடம் கொடுத்து விடாதீர்கள், கர்த்தரே நுகத்தை என் மேல் வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, பாடுகளை பொறுமையோடு சகித்துக்கொண்டு ஜெபத்தில் தரித்து இருங்கள், கர்த்தர் உங்களது நுகத்தை உங்களிடம் இருந்து எடுத்துப்போட்டு உங்களுக்கு ஜெயத்தை கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen
ReplyDelete