ஜனங்களே மனந்திரும்பி ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள்

மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம் (அப்போ14:15). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். மனுஷர்கள் தங்களுக்கு பலியிட மனதாயிருக்கும் போது அப்போஸ்தலர்கள் அதை மறுத்துவிட்டு ‘மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே’ என்று அவர்களுக்கு கூறுகிறார்கள். ஜனங்கள் தேவனுக்குச் செலுத்த வேண்டிய மகிமையை மனுஷனுக்குச் செலுத்தினால் அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள், அதே வேளை தேவனுக்கு கிடைக்க வேண்டிய மகிமையை மனுஷர் அங்கீகரித்தால் அவர்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள். ஆதலால் அப்போஸ்தலர்கள் மனுஷர்கள் தங்களுக்கு பலியிட மனதாயிருந்த போது அதை மறுத்துவிட்டு ‘ நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே ‘ என்று கூறி சத்தியத்தை பிரசங்கிக்கிறார்கள் . ஆம் பிரியமானவர்களே, தேவன் ஒருவரே துதிகளுக்கும், கனத்துக்கும், மகிமைக்கும் பாத்திரர். மனுஷர்கள் துதிகளுக்கும் , ஆராதனைக்கும், மகிமைகளுக்கும் உரியவர்கள் அல்ல. தேவன் ஒருவரே ஆராதனைக்குரியவர். இன்று ஜனங்கள் தங்களை சிருஷ்டித்த தேவனை மறந்து விட்டு மனுஷர்களுக்கும், விக்கிரகங்களுக்கும் தங்களுடைய ஆராதனையை செலுத்தி வருகிறார்கள். மனுஷர்களை சிருஷ்டித்தது தேவன், ஆகவே மனுஷர்களை ஆராதிப்பது எந்த அளவுக்கு நியாயம்? விக்கிரகங்கள் மனுஷர்களுடைய கை வேலைகள், அவைகள் அசைவதில்லை, எழும்பி நடப்பதில்லை , அவைகளுக்கு கண்கள் இருந்தும் அவைகளால் பார்க்க முடியாது, காதுகள் இருந்தும் அவைகளால் கேட்கவும் முடியாது, அவைகளுக்கு வாய் இருந்தும் அவைகளால் பேசவும் முடியாது. ஆகவே சற்று சிந்தித்து பாருங்கள் , தங்களால் பேச முடியாத, தங்களால் நடக்க முடியாத , தங்களால் பார்க்க முடியாத, உங்கள் ஜெபங்களை கேட்க முடியாத விக்கிரகங்கள் உங்களுடைய கடவுளாய் இருக்க முடியுமா? நீங்களும் ஒரு விக்கிர ஆராதனைக்காரராக அல்லது மனுஷர்களை ஆராதிப்பவர்களாய் இருப்பீர்களானால் இப்போதே மனந்திரும்பி ஜீவனுள்ள தேவனுக்கு உங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். அவரே மெய்யான தேவன், அவர் சதாகாலங்களிலும் ஜீவிக்கிறார். அவரே எல்லா மனுஷர்களையும், வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவன். அல்லேலூயா ! ஜனங்களே மனந்திரும்புங்கள். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?