யுத்தம் கர்த்தருடையது

நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது (2 நாளா 20 :15 ).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.’ நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்’ என்று வேதம் சொல்லுகிறது.ஆம் பிரியமானவர்களே, உங்களுடைய பிரச்சனையைப் பார்த்து பயந்து, எப்படி அந்த நிறுவனத்தில் இருந்து, அந்த அதிகாரிகளிடம் இருந்து நான் அந்த ஆவணத்தை பெற்றுக்கொள்ள போகிறேன், எப்படி இந்த பிரச்சனையில் இருந்து நான் வெளியே  வரப்போகிறேன் என்று பயந்து நடுங்கி கலங்கி போய் இருக்கிறீங்களா? கவலை படாதிருங்கள். உங்களுடைய பிரச்சனையைப் பார்க்கிலும் உங்களை சிருஷ்டித்த தேவன் பெரியவர், உங்களுடய பிரச்சனையில் இருந்து உங்களை விடுதலை செய்ய அவரால் முடியும், ஆகவே பிரச்சனையில் இருந்து உங்களை விடுதலை செய்யும் உங்களை மானிடனாக சிருஷ்டித்த தேவனை நோக்கி பாருங்கள் அவர் உங்களுக்காக யுத்தம் புரிந்து உங்களுக்கு ஜெயத்தை கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! யுத்தம்  உங்களுடையது அல்ல, யுத்தம் கர்த்தருடையது அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?