இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் ஆமென் ( மத் 28 : 20 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நீங்கள் உங்கள் எதிர் காலத்தைக் குறித்து பயப்படத்தேவையில்லை, இயேசு உங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார் ‘ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் ஆமென்‘ என்று. ‘ஆமென்’ என்பதன் பொருள் ‘ அப்படியே ஆகக்கடவது ‘. கொடுத்த வாக்கை மறக்க அவர் மனிதன் அல்ல, அவர் உங்களை சிருஷ்டித்த தேவன் நிச்சயமாய் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! இயேசுவை நம்புங்கள் ! அவர் உங்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவர் அல்ல, உங்கள் பிரச்சனையில் உங்களோடு நின்று உங்களை விடுவிப்பவர். ஆமென் ! அவர் ஒரு போதும் உங்களை வெட்க பட்டு போக விட மாட்டார்.தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
Amen
ReplyDelete