இயேசு தன் நாமத்தை அறிந்திருப்பவர்களை விடுவிப்பதோடு அவர்களை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்

அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் ( சங் 91 :14 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.இங்கே இரண்டு காரியங்களை தேவன் இந்த வசனத்தினூடாக எங்களோடு பேசுகிறார்.முதலாவது அவர் மீது வாஞ்சையாய் இருக்கிறவர்களை அவர் விடுவிக்கிறார், இரண்டாவது அவர் நாமத்தை அறிந்திருக்கிறவர்களை அவர் உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்.அல்லேலூயா! எவ்வளவு ஆறுதலான வார்த்தை.வாக்குக் கொடுத்த தேவன் தன்னுடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார்.நீங்கள் இயேசு மீது வாஞ்சையாக இருப்பீர்களானால் அவர் உங்களை உங்கள் பிரச்சனையில் இருந்து, தீமையில் இருந்து விடுவிக்க உண்மையுள்ளவராக இருக்கிறார்.மற்றும் நீங்கள் இயேசு என்ற நாமத்தைஅறிந்திருப்பீர்களானால்அதாவது இயேசு என்கின்ற நாமத்தின் மீது உங்களுடைய விசுவாசத்தை வைப்பீர்களானால் அவர் உங்களை வாதைகளுக்கும், பொல்லாப்புக்கும் விலக்கிப் பாதுகாத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். அலேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பீராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?