நெருக்கம், கர்த்தரை நோக்கி ஜெபம், நெருக்கத்திலிருந்து விடுதலை, கர்த்தருக்கு நன்றி (UK Lockdown - Day 32)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, இன்றைய தினத்தில் 116 சங்கீதத்தை தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்

பிரியமானவர்களே, எங்களுக்கு வாழ்க்கையில் நெருக்கங்களும், துன்பங்களும், வருத்தங்களும் வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தாவீதின் வாழ்க்கையிலிருந்து (சங் 116) நாம் இன்றைக்கு கற்றுக் கொள்ளுவோம். 

1) தாவீதுக்கு வாழ்க்கையில் நெருக்கங்கள் வந்தது.

சங் 116:3 : மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன் 

2) தாவீதுக்கு நெருக்கங்கள் வந்த போது கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறார் 

சங் 116:4 : அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன் 

3) கர்த்தர் மனமிரங்கி தாவீதின் ஜெபத்தைக்  கேட்டு அவரை நெருக்கத்திலிருந்து விடுதலை செய்கிறார் 

சங் 116:5 : கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கமானவர்

சங் 116:8 : என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்

4) கர்த்தர் தன்னை நெருக்கத்திலிருந்து விடுவித்ததுக்காக தாவீது கர்த்தரை துதித்து, அவருக்கு நன்றி செலுத்துகிறார் 

சங் 116:12-13 : கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

(நெருக்கம், கர்த்தரை நோக்கி ஜெபம், நெருக்கத்திலிருந்து விடுதலை, கர்த்தருக்கு நன்றி)
அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.





Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?