கர்த்தர் தம்மில் அன்பு கூறுகிறவர்களை தீங்குக்கு விலக்கிப் பாதுகாக்கின்றார் (UK Lockdown - Day 23)

கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி (சங் 145:20). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, கர்த்தர் தம்மில் அன்பு கூறுகிற யாவரையும் எல்லா தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்கிறார் என்பதை தாவீது தன்னுடைய வாழ்க்கையில் அனுபவரீதியாக அறிந்திருந்தார், அதனால் தான் அவர் சொல்லுகிறார் “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்’ என்று. 

“கர்த்தரிடத்தில் அன்பு கூறுவது” என்பதன் அர்த்தம் கர்த்தரை ஆராதிப்பதா?  

பிரியமானவர்களே, கர்த்தரை ஆராதிப்பவர்களெல்லாம், கர்த்தரிடத்தில் மெய்யாகவே அன்புகூருபவர்களல்ல. 

யாத்திராகமம் 20:6  இல் கர்த்தர் சொல்லுகிறார் “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்” என்று. 

ஆகவே பிரியமானவர்களே, கர்த்தரிடத்தில் அன்பு கூறுவதென்பதன் உண்மையான அர்த்தம் “கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுதல்”.

பிரியமானவர்களே, யோசேப்பு கர்த்தரிடத்தில் அன்பு கூறின படியால் தான் போத்திபாரின் மனைவி அவனை அவளுடன் சயனிக்கும் படி  வட்புறுத்திய போது அவன் சொன்னான் “தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி (ஆதி 39:9) என்று. அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, நாங்களும் கர்த்தருடைய கற்பனைகளுக்கு, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து யோசேப்ப்பைப் போல முழுஇருதயத்தோடு கர்த்தரை அன்பு கூறும் போது கர்த்தர் எங்களையும் கொள்ளை நோயாகிய கொரோனா, மற்றும் எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை (மாற்கு 12:30)

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?