துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும் (UK Lockdown - Day 35)

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும் (சங் 112:7)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, செய்தித் தாள்கள் மூலமாகவும், இணையத் தளத்தின் மூலமாகவும், தொலைக்காட்சியின் மூலமாகவும் கொரோனா தொற்றுக் கிருமியினால் மரிக்கும் ஜனங்களின் தொகைகளை அறிந்து கொண்டிருக்கிற அநேகருடைய இருதயம் இந்நாட்களில் சோர்ந்து போய், தங்களையும் இந்த கொள்ளை நோயாகிய கொரோனா தாக்கி, தாங்களும் கொரோனாவினால் மரித்துப் போய் விடுவோம்  என்று பயந்து போய் இருக்கிறார்கள். 

பிரியமானவர்களே, நீங்களும் கொரோனாவினால் மரிப்பவர்களின் துர்ச்செய்தியை (Bad news) இந்நாட்களில் கேட்பதினால் பயந்து போய் இருக்கிறீர்களா? 

பிரியமானவர்களே, தேவனுடைய வசனம்  சொல்லுகிறது “அவன் துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்” என்று. அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, இந்த கொடூரமான நாட்களில் உங்களுடைய நம்பிக்கையை கர்த்தர் மீது நீங்கள் வைப்பீர்களானால் இவ்வகையான துர்ச்செய்தியை (Bad news) கேட்டாலும் உங்களுடைய இருதயம் பயப்படாமல் கர்த்தருக்குள் திடனாயிருக்கும். அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் கொரோனா செய்திகளில் உங்களுடைய கவனத்தை செலுத்தாமல் கர்த்தர் மீது உங்களுடைய நம்பிக்கையையும், கவனத்தையும் செலுத்தும் போது இந்த பூலோகத்தில் என்னதான் ஆபத்தான, பயங்கரமான, கொடூரமான காரியங்கள் உங்களை சூழ நடந்தாலும் அந்த அவைகளினால் நீங்கள் அழிந்து போக மாட்டீர்கள். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments