நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (UK Lockdown -Day 33)

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (சங் 63 :7).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது இந்த சங்கீதத்தை யூதாவின் வனாந்திரத்தில் இருக்கையில் பாடினார்.

பிரியமானவர்களே, தாவீதுக்கு வாழ்க்கையில் அவருடைய எதிரிகளினால் உயிர் ஆபத்து உண்டான போதெல்லாம் அவர் தேவனையே சார்ந்து வாழ்ந்தார், அதனால் தேவனும் அவரை ஒவ்வொரு முறையும் எதிரிகளின் கைக்கு விலக்கிப் பார்த்துகாத்துக் கொண்டே வந்தார், அதனால் தான் அவர் சொல்லுகிறார் “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” என்று. அல்லேலூயா !

பிரியமானவர்களே, தேவன், தாவீதை அவருடைய எதிரிகளின் கைக்கு விலக்கிப் பாதுகாத்தது போல் இன்று எங்களையும் தேவன் எத்தனையோ ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டு வருகிறார். ஆனால் வாழ்க்கையில் தாவீதை போல் நீங்களும், நானும் தேவனுக்கு நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் என்று சொன்னதுண்டா?

பிரியமானவர்களே, கொரோனா தொற்றுக் கிருமியினால் இன்று இந்த பூலோகத்தில் இலச்ச கணக்கான ஜனங்கள் மரித்து விட்டார்கள், இன்றும் மரித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும், நானும் உயிரோடு இருப்பது என்றால் அது தேவனுடைய கிருபை. அல்லேலூயா !

ஆகவே, பிரியமானவர்களே, தேவனை நோக்கி  “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால் தான் கொரோனாவுக்கு உயிர் தப்பி உயிரோடு இருக்கிறேன், உமது செட்டைகளின் நிழலிலே நான் களிகூருகிறேன்” என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்துவோமா? அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தியும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?