இயேசுவே, உங்களுடைய பிராணனுக்கு அதிபதி (UK Lockdown - Day 27)

கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் (சங் 54:3)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, இந்த 54 வது சங்கீதத்துக்கு “தாவீது தங்களிடத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறான் என்று சிப்பூரார் வந்து சவுலுக்குச் சொன்ன போது, நெகினோத்தில் வாசிக்கத் தாவீது பாடின இராகத் தலைவனுக்கு ஒப்புவித்த மஸ்கீல் என்னும் சங்கீதம்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

பிரியமானவர்களே, யூதாஸ் காரியோத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தான், யூதாவின் ஜனங்களாகிய சிப்பூரார் தாவீதைக் காட்டிக் கொடுத்தார்கள், இவர்கள் தாவீது எங்கே ஒளித்துக் கொண்டிருக்கிறார், அவரை எப்படி பிடிக்கலாம் என்று சவுலுக்கு ஆலோசனை சொன்னார்கள், அதனால் தான் “சிப்பூராரை” யூதாஸ் காரியோத்துக்கு அடையாளப்படுத்தி வேதப் பண்டீதர்கள் கூறுகிறார்கள். 

இவர்கள் இரண்டு முறை சவுலிடம் வந்து தாவீதைப் பிடிப்பதட்க்கு ஆலோசனை சொல்லுகிறார்கள். 

1 . பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? (1  சாமு 23:19)

2 . பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள் (1  சாமு 26:1)

பிரியமானவர்களே, இந்த சூழ்நிலையில் தான் தாவீது கர்த்தரை நோக்கி இந்த 54  வது சங்கீத்தை விசுவாசத்தோடு பாடினார். 

முதல் மூன்று வசனங்களில் கர்த்தருடைய உதவிக்காக பயபக்தியோடு ஜெபிக்கிறார்.

தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும். தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள் (சங் 54:1-3)

54  வது சங்கீதத்தை அவர் முடிக்கும் போது அவர் சொல்லுகிறார், அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது (54:7) என்று. அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, கர்த்தர் தம்மை நம்பின பிள்ளைகளை ஒரு போதும் கை விடுவதில்லை, தாவீது விசுவாசித்தார் “கொடியர் அவருடைய பிராரணை வாங்கத் தேடினாலும்” கர்த்தரை மீறி யாரும் அவரின் பிராரணைத் தொட முடியாது என்று. அவருடைய பிராரணுக்கு கர்த்தரே அதிபதி என்று. 

ஆம் பிரியமானவர்களே, இன்று “கொடியவனாகிய பிசாசு கொரோனா என்ற கொள்ளை நோயின் பேரில் தேவ பிள்ளைகளாகிய நம்முடைய பிராரணை வாங்க தேடுகிறான்”. 

ஆனால் பிரியமானவர்களே, தேவன் தமது பிள்ளைகளுக்கு கொடுக்கும் அவருடைய பாதுகாப்பைக் குறித்துச் சொல்லும்போது சொல்லுகிறது, “ தேவன் தம்முடைய பிள்ளைகளை தீங்கு நாளில் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து பாதுகாக்கிறார்” (சங் 27:5). என்று அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, தேவன் உங்களை உங்களுடைய தீங்கு நாளில் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து பாதுகாக்கும் போது நீங்கள் ஏன் இந்த அட்ப கொரோனாவுக்காக பயப்படவேண்டும்? பயப்படாதீர்கள். தேவனுடைய பாதுகாப்பு உங்கள் மீது இருக்கும் பட்ச்சத்தில்  யாராலும், எந்த தீய சக்திகளாலும், எந்த கொள்ளை நோய்களாலும் உங்களை அணுகவும் முடியாது, உங்களுடைய பிராணனைத் தொடவும்  முடியாது. அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?