எதிரியின் (கொரோனாவின்) வல்லமையைக் கண்ட நாங்கள், அவனை முறியடிக்க செய்ய வேண்டிய “மூன்று” காரியங்கள் (UK Lockdown - Day 21)

அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார் (சங் 59:9-10). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, தாவீதுக்கு வாழ்க்கையில் அநேக எதிரிகள் இருந்தது மாத்திரமல்ல, அவர்கள் எல்லாரும் உலகப்பிரகாரமாக பலசாலிகளாகவும் இருந்தார்கள்.

அவ்வாறு தாவீது தன்னுடைய எதிரியினால் வாழ்க்கையில் நெருக்கப்படும் ஒரு சூழ்நிலையின் போதே அவர் சொல்லுகிறார்,
“அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்”’என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய எதிரியின் வல்லமையைக் கண்டு, அவருடைய  ஆபத்துக் காலத்தில்,  

(1 ) தேவனுக்காக காத்திருந்தார்

(2 ) தேவனை அவருடைய வாழ்க்கையில் உயர்ந்த அடைக்கலமாக கொண்டிருந்தார்

(3 ) தேவன் தம்முடைய கிருபையினால் அவரை “எதிரிகளிடமிருந்து” பாதுகாப்பார் என்று விசுவாசித்தார்.

ஆம் பிரியனானவர்களே, நாங்களும் எங்களுடைய எதிரியான “கொரோனாவின்” வல்லமையைக் கண்டு, நம்முடைய இந்த ஆபத்து நாட்களில் தாவீதை போல், 

(1 ) தேவனுக்காக காத்திருப்போம் (ஆபத்து காலத்தில் வேத வாசிப்பு, ஜெபம்)

(2 ) தேவனை எங்களுடைய வாழ்க்கையில் உயர்ந்த அடைக்கலமாக வைத்துக் கொள்ளுவோம் (ஆபத்து காலத்தில் தேவன் கடந்த காலத்தில் செய்த நன்மைக்காக நன்றி செலுத்தி, துதித்தல்)

(3 ) தேவன் தம்முடைய கிருபையினால் எங்களை “கொரோனாவில்” இருந்து பாதுகாத்துக் கொள்ளுவார் என்று விசுவாசிப்போம். 

பிரியமானவர்களே, தாவீதின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தேவன் நிச்சயமாக கொரோனாவுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைப்பார்  விசுவாசியுங்கள். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும்  பாதுகாப்பாராக.ஆமென்.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?