இராவேளையில் எங்களைத் தாங்கும் கர்த்தர் (UK Lockdown Day - 24)

நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக் கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார் (சங் 3:5).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய மகன் அப்சலோமுக்கு பயந்து தன்னுடைய அரண்மனையை விட்டும், தன்னுடைய ராஜ்யத்தின் தலைநகரமாகிய எருசலேமை விட்டும் தப்பி ஓடிப் போகையில் மூன்றாம் சங்கீத்தைப் பாடினார்.

பிரியமானவர்களே, தாவீதுக்கு கர்த்தர் தன்னை தாங்குகின்றார், அவர் தன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்கிறார் என்கின்றதான நிச்சயம் அவர் உள்ளத்தில் இருந்தது, அதனால் தான் அவரைச் சுற்றிலும்  ஆபத்துக்கள் சூழ்ந்திருந்த போதும் அவர் பயமில்லாமல், சமாதானமாய் இரா வேளையில் நித்திரை செய்கிறார்.

அவர் சொல்லுகிறார் “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்” என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தாவீதை போல் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும் இரா வேளையில் கர்த்தரே நம்மை தாங்குகின்றார், அவரே நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்கின்றார் என்கின்றதான விசுவாசம் இருக்க வேண்டும். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது,  இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார் (சங் 121:4-8). அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொரு நாளும் நித்திரைக்கு செய்வதட்க்கு முன்பாகவும், நித்திரையை விட்டு எழுந்திருக்கும் போதும் கர்த்தருடைய சமூகத்தில் நம்மை ஒப்புக் கொடுத்து கர்த்தர் எங்களைத் தாங்குகிறததுக்காகவும், அவர் நமக்கு கொடுக்கின்றதான பாதுகாப்புக்காகவும் அவருக்கு நன்றி செலுத்தி அவரைத் துதிக்க வேண்டும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?