துன்மார்க்கனுக்காகத் நியாயத் தீர்ப்பு நாளை உண்டாக்கியிருக்கும் தேவன் (UK Lockdown - Day 15)

கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார் (நீதி 16:4) 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தரே சர்வ சிருஷ்டிகர், அவரே வானத்தையும், பூமியையும், அண்டசராசரங்களையும் சிருஷ்டித்தவர்.

பிரியமானவர்களே, இவ்வசனத்தின் “இரண்டாம் பகுதி” மூலமொழியிலிருந்து தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் சரியான விதத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. மூல மொழியில் இரண்டாம் பகுதி “துன்மார்க்கனுக்காகத் தீங்கு நாளை உண்டாக்கினார்” என்றே உள்ளது. 

ஆகவே இந்த வசனம் இவ்வண்ணமாய் இருக்க வேண்டும் “கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார், துன்மார்க்கனுக்காகத் தீங்கு நாளை உண்டாக்கினார்” என்று. 

பிரியமானவர்களே, தேவன் யாரையும் துன்மார்க்கனாக உருவாக்கவில்லை, அவர் எல்லாரையும் நல்லவராகவே உருவாக்கியுள்ளார், மனிதன் தான் துன்மார்க்கமான (காயீனின் வழி) வழிகளைத் தெரிந்து கொண்டு தன்னை துன்மார்க்கனாக மாற்றி விடுகிறான். இது தேவனுடைய தப்பிதமல்ல.

பிரியமானவர்களே, தேவன் துன்மார்க்கரையல்ல தீங்கு நாளையே உருவாக்கியுள்ளார். தீங்கு நாளென்பது “நியாயத் தீர்ப்பு நாளாகும்” நியாயத் தீர்ப்பு நாளே துன்மார்க்கருக்குத் தேவன் தண்டனை கொடுக்கப்படும் தீங்கு நாளாக உள்ளது. அல்லேலூயா 

ஆகவே பிரியமானவர்களே, நாங்களும் ஒரு விசை  எங்களை தேவ சமூகத்தில் ஆராய்ந்து பார்த்து, துன் மார்க்கமான காயீனின் வழிகள் நம்மிடமும் இருக்குமானால் தேவ சமூகத்தில் இப்போதே  மனந்திரும்புவோம். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?