என் கரத்தினால் உன்னை மூடுவேன் (UK Lockdown - Day 9)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, நீங்கள் “கொரோன வைரஸ்”  இன் நிமித்தம் பயந்து, நடுங்கிக் கொண்டு இருக்கிறீங்களா ? 

பயப்படாதீர்கள். தேவன் கொரோன வைரஸ் யைப் பார்க்கிலும் பெரியவர். அவர் உங்களை சிருஷடித்தது மாத்திரமல்ல தாயின் கருவில் நீங்கள் அழிந்து போகாத வண்ணம் உங்களைக் காத்து, பராமரித்து இந்நாள் வரை எத்தனையோ ஆபத்துக்களிலிருந்து அவர் உங்களைக் காத்து வழி நடத்தி வந்திருக்கிறார். 

ஆகவே, நீங்கள் இன்றையிலிருந்து  தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கின்ற நன்மைகளை, அதிசயங்களை நினைத்து பார்த்து அவற்றுக்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு நன்றி செலுத்தி அவரை துதியுங்கள். கர்த்தர் நல்லவர், இதுவரை உங்களை வழிநடத்தி வந்த எபினேசர் இனிமேலும் உங்களை வழி நடத்துவார். அல்லேலூயா !

பிரியமானவர்களே, இந்த புதிய மாதத்தில் தேவன் உங்களுக்கு ஒரு வாக்குத்தைத்ததை கொடுக்கிறார்.  
   
  “ என் கரத்தினால் உன்னை மூடுவேன் “  (யாத்தி 33 : 22 ) என்று. 

பிரியமானவர்களே, உங்களை சிருஷ்டித்த, உங்களை உருவாக்கின தேவன் உங்களை பார்த்து ‘என் கரத்தினால் உன்னை மூடுவேன்’ என்று சொல்லும் போது நீங்கள் ஏன் கொரோன வைரஸ் யை பார்த்து பயப்பட வேண்டும். தேவன் கொரோனவைப் பார்க்கிலும் பெரியவர். அவர் உங்களை எந்த ஆபத்தும் அணுகாத வண்ணம் தனது கரத்தினால் மூடி பாதுகாப்பார். அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, கொரோன வைரஸில் உங்களுடைய கவனத்தை செலுத்துவதை நிறுத்தி விட்டு, உங்களை இந்நாள் வரை நடத்தி வந்த தேவன் இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய கவனத்தை செலுத்தத் தொடங்குங்கள். வாக்குக் கொடுத்த தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர் உங்களை தனது கரத்தினால் மூடி எந்த ஆபத்தும் உங்களை அணுகாத வண்ணம் எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாப்பார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்