கொரோனாவே, நீ தோற்று போனவன் (UK Lockdown - Day 18)

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவா 19:30). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனுஷ குலத்தின் பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதலுக்காக, சாபங்களுக்காக கல்வாரி சிலுவையில் அவருடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி  மரித்ததை நினைவு கூறும் நாளே “பெரிய வெள்ளி” ஆகும்.    

பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் அறையப்பட்டிருந்த போது “ஏழு” வார்த்தைகளை பேசினார். 

அவர் பேசின “ஆறாவது” வார்த்தை தான் “முடிந்தது” 

பிரியமானவர்களே, ஆண்டவர் பேசின “ஆறாவது” வார்த்தையை இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். 

“முடிந்தது” என்பது எல்லாமே முடிஞ்சு போயிற்று” என்று ஒரு ஏமாற்றத்திலோ அல்லது தோல்வியிலோ சொல்லப்பட்ட வார்த்தை அல்ல.

முடிந்தது என்பதட்க்கு மூல மொழியாகிய கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை “TETELESTAI” – “தெதேலேஸ்தாயி” என்பதன் பொருள் “எல்லாம்  முழுமையாகவும், வெற்றிகரமாகவும், நிறைவேறியது” என்பதாகும். ‘தெதேலேஸ்தாயி’ என்பது, “ஒரு வெற்றியின் அறைகூவல்”, “ இது ஒரு வேதனையின் முனகல்” அல்ல. அல்லேலூயா !

பிரியமானவர்களே, போரின் வெற்றிச் செய்தியைக் கொண்டு வரும் ஒரு படைவீரன், அரசரிடம் வந்து, அவரை வணங்குவதற்கு முந்தி, முதலில் சொல்லும் வாரத்தை, “தெதேலேஸ்தாயி”.

இயேசுவும், கல்வாரி சிலுவையில் அதே  வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். சாத்தானை அவர் சிலுவையில் ஜெயித்ததினால் தான்  TETELESTAI” – “தெதேலேஸ்தாயி 
(முடிந்தது) என்று கூறி மரித்தார்.

பிரியமானவர்களே, தேவன் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது மூலம் பாதாளத்தையே ஜெயித்து விட்டார். அல்லேலூயா ! 

ஆகவே பிரோயமானவர்களே நீங்கள் “கொரோனாவாவைப்” பார்த்து பயப்படாதீர்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து “முடிந்தது” என்று சிலுவையில் கூறியதன் மூலம் அவர் “கொரானாவையும்” சிலுவையில் ஜெயித்து விட்டார். அல்லேலூயா 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் நம்புகிற அனைவரும் “கொரோனவை” ஜெயித்து விட்டார்கள். அல்லேலூயா 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடுமபத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?