தேவன் என்னோடேகூட இருப்பதால் கொரோனாவுக்கு பயப்படேன் (UK Lockdown - Day 19)

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் (சங் 23:4). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, தாவீது அவருடைய வாழ்க்கையில் மரண ஆபத்தினூடாக, மரண இருளின் பள்ளத்தாக்கினூடாக கடந்து சென்ற போது, அவர் விசுவாசத்தோடு சொல்லுகிறார், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” என்று.

பிரியமானவர்களே, தாவீது எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் மீது அசைக்க முடியாத பெலமுள்ள விசுவாசத்தை வைத்திருந்தார், அதனால் தான் தேவனும் தாவீது அவர் மீது வைத்திருந்த பெலமுள்ள விசுவாசத்தை கனப்படுத்தி தாவீதுக்கு அவருடைய ஆபத்தான காலங்களில் தன்னுடைய தேவ பாதுகாப்பைக் கொடுத்து எந்த பொல்லாப்பும் அவரை சேதப்படுத்தாத வண்ணம் காத்துக்கொண்டார். அல்லேலூயா ! 

பிரியமனானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்களும், நானும் தாவீதைப் போல் தேவன் மீது அசைக்க முடியாத பெலமுள்ள விசுவாசத்தை வைத்திருப்போமானால், “கொரோனா போன்றதான மரண இருளின் பள்ளத்தாக்கிலே” நாம் நடந்தாலும் அது நம்மை அணுகாத வண்ணம், நம்மை சேதப்படுத்தாத வண்ணம் தேவன் அவருடைய தேவ பாதுகாப்பை நமக்குக் கொடுத்து தொடர்ந்தும் காத்துக்கொள்ளுவார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?