"Coronavirus Pandemic" க்கு தேவன் காரணரா? (UK Lockdown - Day 22)

என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர் (சங் 88:6). 

நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன் (சங் 88:8b)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, இன்றைய தினத்தில் சங்கீதம் 88 யை தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே,  “எண்பத்தெட்டாவது” சங்கீதம் ஒரு புலம்பலின் சங்கீதமாகும். ஆரம்பம் முதல் முடிவு வரை (வசனம் 1-18) முழுவதுமே புலம்பலாகவே இருக்கின்றது. இந்த சங்கீதத்தை “ஏமான்” எழுதியிருக்கிறார், அவரின் இருதயம் மனவேதனையினாலும், மனக்கலகத்தினாலும் நிறைந்திருக்கிறது, இவர் தன்னுடைய துக்கத்துக்கு, தான் இருக்கின்றதான இறுக்கமான, நெருக்கமான சூழ்நிலைக்கு தேவனே காரணம் என்று புலம்புகிறார். என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர் (சங் 88:6). 

பிரியமானவர்களே, ஏமானைப் போல இன்று நம்மில் அநேகர் இப்போது நாம் இருக்கின்றதான சூழ்நிலைக்கு தேவனே காரணம், தேவன் ஒருவர் இருப்பாரென்றால்  அவரால் ஏன் இந்த Corona virus pandemic யை அழித்து, ஜனங்களை ஏன் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது? அவருக்கு கண், காது இல்லையா? அவருக்கு காது இருந்திருந்தால் என்னுடைய ஜெபத்தை, என்னுடைய கதறலைக் அவர் கேட்டு பதில் கொடுத்துதிருப்பார் என்று இன்று தேவனை நம்மில் அநேகர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

பிரியமானவர்களே, தேவன் நாம் இருக்கின்றதான இறுக்கமான சூழ்நிலைக்கு, நம்முடைய குற்றத்துக்கு எந்த விதத்திலும் பாத்திரரல்ல. பிரியமானவர்களே, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் நம்முடைய எல்லாக் கேவிகளுக்கும் பதில் கொடுப்பவர் அல்ல. ஆபகூக் தீர்க்கதரிசி தேவனை நோக்கி அநேக கேள்விகளை ஏறெடுத்தார், ஆனால் தேவன் எந்த பதிலும் அவருக்கு கொடுக்கவில்லை, அவர் அமைதியாகவே இருந்தார். 

பிரியமானவர்களே, தேவன் யாருக்கும் தீங்கு செய்வதுமில்லை, யாரையும் அவர் கொன்று, அழித்துப் போடுவவருமல்ல, தேவன் அன்புள்ளவராக, நல்லவராக, மனுஷர்களுக்கு எப்போதும் நன்மை செய்கிறவராகவே இருக்கிறார். அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, இவ்வுலகின் சகல துயரங்களுக்கும், பாடுகளுக்கும் மானிட பாவமே மூல காரணமாக இருக்கின்றது. அப்படியென்றால் யோபுவுக்கு? இந்த கேள்வி உங்கள் மத்தியில் எழும்பலாம். யோபுவின் புஸ்தகத்தை மாத்திரம் நீங்கள் வேத புஸ்தகத்தில் தெரிந்தெடுத்துப் படித்தால் இந்த கேள்வி நிச்சயமாக உங்கள் உள்ளத்தில் எழும்புவதோடு, இந்த pandemic யை தேவனே அனுமதித்தது போல் உங்களுக்கு தோன்றலாம். 

ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் ஆதியாகம  புஸ்தகத்திலிருந்து வெளிப்படுதல் புஸ்தகம் வரைக்கும் வேதத்திலுள்ள 66 புஸ்தகங்களையும் படித்துப் பார்ப்பீர்களென்றால், தேவன் எந்த விதத்திலும் நாம் இருக்கின்றதான நம்முடைய இந்த ஆபத்தான சூழ்நிலைக்கு காரணரல்ல என்பது உங்களுக்குத் புரியும்.  

ஆகவே பிரியமானவர்களே, நாம் இருக்கின்றதான நம்முடைய ஆபத்தான, இறுக்கமான சூழ்நிலைக்கு தேவனை நாம் குற்றம் சுமத்துவதை நிறுத்தி விட்டு, நம்முடைய நெருக்கமான இந்த சூழ்நிலையில் தேவ சமூகத்தில் நம்மை ஆராய்ந்து பார்த்து, தேவனை வேதனைப்படுத்தும் வழிகள் நம்மிடம் இருக்குமானால் காலதாமதம் பண்ணாமல் இப்போதே தேவ சமூகத்தில் பாவ அறிக்கை செய்து நம்முடைய பொல்லாத வழிகளில் இருந்து மனந்திரும்புகிற வழிகளை நோக்கி பார்ப்போம்.

அவ்வாறு தேவ சமூகத்தில் பாவ அறிக்கை செய்து, தேவனிடம் எங்களை இந்த கொரானாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் படி தேவனுடைய இரக்கத்துக்காக நாம் கதறி அழும் போது நிச்சயமாக தேவன் தம்முடைய முகத்தை நம்பக்கமாகத் திருப்பி நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

தேவன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?