உங்களை விசாரிக்கும் தேவன் (UK Lockdown - Day 20)

மகதலேனாமரியாள் இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள் (யோவா 20:14-15) 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு பேசின முதல் வார்த்தைகளை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, தேவனுக்கு நம் கண்ணீர், நம் வேதனைகள் தெரியும். அதுமாத்திரமல்ல 
அவர் எங்கள் ஒவ்வொருவர் மீதும் கரிசனையுள்ளவராகவும், எங்களை அவர் விசாரிக்கிறவராகவும் இருக்கிறார். அதனால் தான் அவர் உயிர்த்தெழுந்த பின்பு மகதலேனா மரியாளுக்கு அருகில் வந்து, “ஸ்திரீயே ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் ? என்று கேட்டார். 

பிரியமானவர்களே, இன்று நாம் போகின்றதான சூழ்நிலைகளை தேவன் நன்கு அறிந்திருக்கின்றார், அவர் நமது கண்ணீரைக் கண்டு கடந்து போகிறவரல்ல, அவர் நம் மீது கரிசனையுள்ளவராகவும், நம்மை விசாரிக்கிறவராகவும் இருக்கிறார்.

(1) அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7) என்று

(2) நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி 4:6)

தேவன் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். அல்லேலூயா !  

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்