பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற என்னுடைய ராஜா (UK Lockdown - Day 37)

பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா (சங் 74:12)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, சங்கீதக்காரன் தேவனைக் குறித்துச் சொல்லும் போது “பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற என்னுடைய ராஜா” என்று சொல்லுகிறார். 

பிரியமானவர்களே, ராஜா என்பதன் அர்த்தம் தேசத்தை பாதுகாப்பவர், அல்லது தேச ஜனங்களை விடுவிப்பவர். 

ஆம் பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூலோகத்தில் வாழும் ஜனங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறார், அவர் அவரை நம்புகிற ஜனங்களை பாவத்திலிருந்து, தீமையிலிருந்து இரட்சிக்கிறவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, அவரை உங்களுடைய ஆண்டவராக உங்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது அவர் உங்களுக்கு  ராஜாவாக இருந்து உங்களை உங்களுடைய பாவங்களிலிருந்து மன்னிக்கவும், கொரோனா போன்றதான தீமைகளிலிருந்தும் உங்களை பாதுகாக்க உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு ராஜா உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்