ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும் தேவன் (UK Lockdown - Day 34)

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும் (நீதி 10:27)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்” என்று. 

முதலில் “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்பதன் அர்த்தம் என்ன என்பதை வேத வசனத்தின் படி ஆராய்ந்து பார்ப்போம்.

ஆதியாகமம் 22 ம் அதிகாரம் 12 ம் வசனத்தின் படி “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்பது தேவனுடைய/ கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதல்.
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார் (ஆதி 22:12)

பிரியமானவர்களே, ஆயுசு நாட்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகின்றது?
கர்த்தரே நம்முடைய ஜீவனுக்கு அதிபதி, அவருடைய கரத்திலே நம்முடைய ஆயுசு நாட்கள் இருக்கின்றது என்பதட்க்கு தானியேல் 5 ம் அதிகாரம் 23 ம் வசனம் எங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றது.

“கர்த்தர் தம்முடைய கையில் நமது சுவாசத்தை வைத்திருக்கிறார்” (தானி 5 : 23 ) 

எசேக்கியா ராஜா தேவனுடைய நியமனங்களுக்கு, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து அவருடைய சித்தத்தை செய்ததால், தேவன் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவனை மரணத்துக்கு ஏதுவான வியாதியில் இருந்து குணப்படுத்தி, அவனுடைய ஆயுசு நாட்களில் 15 வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார் (2 இரா 20 )
பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு, அவருடைய நியமனங்களுக்கு/ கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் (கர்த்தருக்குப் பயந்து)  போது அவர் உங்களுடைய ஆயுசு நாட்களை பெருகப் பண்ண, கூட்டிக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா!

ஆகவே பிரியமானவர்களே, கொள்ளை நோயாகியாகிய கொரோனாவுக்குப் பயப்படாதீர்கள், கர்த்தரே உங்களுடைய ஜீவனுக்கு அதிபதியாக இருக்கிறார். கொரோனாவினால் உங்களை நெருங்கவும் முடியாது, உங்களுடைய உயிரை பறிக்கவும் முடியாது. அல்லேலூயா ! 

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது (சங் 91:10)

நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என், இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன் (சங் 91:16) 

பிரியமானவர்களே, வாக்குக் கொடுத்த தேவன் தனது வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார். ஆகவே கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நீங்கள் அவருடைய சித்தத்தை செய்யும் போது கர்த்தர் உங்களுடைய ஆயுசு நாட்களை கூட்டிக் கொடுக்க உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்