ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும் (ஏசா 24:10 b).
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, வேத புஸ்தகத்தில் இருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் வியாக்கியானம் பண்ணும் போது, அவற்றை நம்முடைய சொந்த ஜீவியத்துக்கு பயனுள்ள வழிகளில் வியாக்கியானம் செய்து பிரயோஜனம் அடைய வேண்டும்.
யூதா ஜனங்கள் தங்களுடைய பாவத்திலிருந்து மனந் திரும்பாத பட்ச்சத்தில், ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி அவர்களுடைய , வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்” என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார்.
ஒருவேளை நகரத்தில் கொள்ளை நோய் வரும் , அதனால் மரணத்துக்குப் பயந்து ஜனங்கள் தங்கள் வீடுகளின் கதவுகளை அடைத்து கொண்டு இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்தாரா என்று தெரியவில்லை, ஆனால் எது எப்படியாக இருந்தாலும் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாய் சொன்ன வார்த்தைகள் நம்முடைய சொந்த ஜீவியதோடு எவ்வளவு பொருத்தத்தமாய் இன்று இருக்கின்றது என்று பாருங்கள். கடந்த “பத்து நாட்களாக உறவினர்களோ, நண்பர்களோ நம்முடைய வீடுகளுக்குள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, கொள்ளை நோயின் நிமித்தம் நம்முடைய வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கின்றது.
பிரியமானவர்களே, சூழ்நிலை எப்படியாக இருந்தாலும் காற்றையும், கடலையும் அதட்டி அமைதி படுத்திய தேவன் இயேசுவினால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, அவரால் மாத்திரம் தான் இந்த கொரோனா கிருமிகளை அழித்து இப்போது நாம் இருக்கின்றதான நம்முடைய சூழ்நிலைகளை மாற்றி தேசத்தில் மீண்டுமாக சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் தேவை சமூகத்தில் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, அறிக்கை செய்யப்படாத பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பி இன்னுமாக பரிசுத்த ஜீவியத்தில் முன்னேறுவதோடு, தேச மக்களின் மனந்திரும்புதலுக்காகவும் இடைவிடாது தேவ சமூகத்தில் ஜெபிப்போம். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக.
Comments
Post a Comment