திடன்கொண்டு தைரியமாயிருங்கள் (UK Lockdown - Day 31)

நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள், அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்,அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள் (2 நாளா 32:7- 8)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.

பிரியமானவர்களே,  ஆசீரியர்களினால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்கள் நெருக்கப்பட்டு அவர்களுக்குப் பயந்து, என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிப் போய் இருந்த போது இஸ்ரவேலின் ராஜா எசேக்கியா இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து “நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள், அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்,அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி, அவர்களைத் தேற்றினார்”. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, கொரோனான தொற்றுக் கிருமியினால் நெருக்கப்பட்டு, கொரோனாவுக்குப் பயந்து கலங்கிப் போய் இருக்கிற எங்களைப் பார்த்து கர்த்தர் பேசுகின்றதான ஆறுதலான வார்த்தை “நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள், கொரோனாவுக்கு பயப்படாமலும், கலங்காமலுமிருங்கள், கொரோனா தொற்று கிருமியைப் பார்க்கிலும் உங்களோடு இருக்கின்ற நான் பெரியவர், நான் உங்களை அழிவில் இருந்து பாதுகாப்பேன் என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, மரணத்தை ஜெயித்த தேவன் இயேசுவே உங்களை பார்த்து திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லும் போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?

பயப்படாதீர்கள். திடன்கொண்டு தைரியமாயிருங்கள். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?