மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத் 6:1-4). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள நான்கு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இன்று ஒரு கூட்ட ஜனங்கள் மாயமாலமாக தான தருமங்கள் செய்து வருகிறார்கள் , கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றோ , அல்லது மனுஷர் மீதுள்ள அன்பினாலோ அல்லது ஏழைகள் மீது இரங்கி, மனதுருகியோ அவர்கள் தான தருமம் பன்னுவதில்லை, மாறாக தங்களுடைய சுய பெருமைக்காகவும், வீணான புகழ்ச்சிக்காகவும், தங்களுடைய நாமத்தை பிரசித்தப்படுவதுக்காகவும், தங்களுக்கு நல்ல பெயர் கிடைப்பத்துக்காகவும் தருமம் பண்ணுகிறார்கள். அவர்கள் மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக தான தருமம் பண்ணுகிறார்கள் , மனுஷர்கள் காணும் படி தான தருமம் பண்ணுவது தவறல்ல, ஆனால் உங்களுடைய பெயரை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு செய்யாமல், சுத்த இருதயத்தோடு மனப்பூர்வமாக , மனுஷர்கள் மீதான கரிசனையோடு அன்பின் நிமித்தம் தான தருமம் பண்ண வேண்டும். அல்லேலூயா ! செய்கின்றதான தான தருமத்தை தாரை ஊதி எல்லாருக்கும் விளம்பரப்படுத்தி புகழ்ச்சிக்காக, சுய மகிமைக்காக மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக மாயமாலமாக பண்ணும் தான தருமத்தை வேதம் எச்சரிக்கின்றது. அவ்வாறு மனுஷர்களால் புகழப்படுவதட்காக தான தர்மம் பண்ணுகிறவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்த்து விட்டார்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உபேதேசிக்கிறார். ஆகவே நாம் செய்யும் தான தருமம் அந்தரங்கமாக இருக்க வேண்டும், நமது வலது கை செய்வதை நமது இடது கை அறியாத படி நமது தான தருமத்தை அந்தரங்கமாக செய்ய வேண்டும். அல்லேலூயா ! வலது கை செய்கிற தான தருமத்தை இடது கை அறியாதிருக்கக்கடவது என்பதன் அர்த்தம் ‘ செய்கின்ற தான தர்மத்தை மனப்பூர்வமாக முடிந்த வரையில் மற்றவர்களுக்கு விளம்பரம் பண்ணாமல் அந்தரங்கமாக செய்ய வேண்டும் என்பதே’ அல்லேலூயா ! அவ்வாறு நீங்கள் அந்தரங்கமாக மனப்பூர்வமாக பண்ணுகின்ற தான தர்ம காரியங்களை மனுஷர்கள் காணாமலும், அறியாமலும் இருக்கலாம் ஆனால் நம்முடைய தேவனாகிய பரலோக பிதாவுக்கு ஒன்றும் மறைவாக இல்லை, எல்லாம் அவருக்கு முன்பாக நிர்வாணமாய் இருக்கின்றது, அவர் உங்களுக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். நம்முடைய பரலோக தகப்பன் நமக்குக் கொடுக்கும் பலன் எவ்வாறு ஒரு தகப்பன் தனது பிள்ளைக்கு கஞ்சத்தனமில்லாமல் அவன் எதிர்பார்த்ததை விட தாராளமாக கொடுப்பாரோ அதைப் போல மிகவும் தாராளமாயிருக்கும். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment