நற்கிரியைகளைச் செய்கிறதற்காகவே நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்க்கப்பட்டிருக்கிறோம்

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே 2:8-10). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுகிறோம். ஆனால் நம்முடைய இரட்சிப்புக்கு நாம் எந்த விதத்திலும் காரணமல்ல, இது நம்முடைய கிரியைகளினால் உண்டானதல்ல. ஆகவே நம்முடைய சுயகிரியையைக் குறித்து பெருமை பாராடட நமக்கு இடமில்லை. இது முற்றும் முழுதாக தேவனுடைய ஈவு. அல்லேலூயா ! தேவனுடைய கிருபையை பெற்றுக்கொள்ளுவதட்க்கு நாம் எந்த விதத்திலும் தகுதியானவர்களல்ல. தேவன் இரக்கத்தின் ஐசுவரியமுள்ளவராயிருக்கிற படியால் . அவருடைய அன்பினாலே அவருடைய கிருபை நமக்குக் கிடைத்திருக்கிறது. அல்லேலூயா !  நாங்கள் நம்முடைய அக்கிரமங்களினால் மரித்தவர்களாயிருந்தோம். தேவனோ தம்முடைய அன்பினால் நம்மை நோக்கிப் பார்த்து தம்முடைய கிருபையினால் நம்மை கிறிஸ்துவுடேனேகூட உயிர்ப்பித்திருக்கிறார்.அவர் நம்மை நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் நம்மை இரட்சிக்காமல், அவருடைய கிருபையினால், நாம் இயேசு கிறிஸ்துவில்  வைத்திருக்கிற விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இரட்சிப்பும், விசுவாசமும் தேவனுடைய ஈவு. ஆகவே நம்முடைய மனமாற்றத்துக்கு நாம் காரணமல்ல. சகலதும் தேவனுடைய கிருபையினால் நடைபெறுகிறது. அல்லேலூயா !. நற்கிரியைகளைச் செய்கிறதற்காகவே நாம் தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். நாம் நற்கிரியைகளைச் செய்ய வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் இதட்காகவே தேவன் நம்மை கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டித்திருக்கிறார். நாம் நற்கிரியைகளில் நடக்கும் படி தேவன் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். நற்கிரியைகளில் நடப்பது என்பதட்க்கு நம்முடைய பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுவது என்றும்  பொருள். நம்முடைய பேச்சும், செயலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். இரட்சிக்கப்படட நாம் கர்த்தருக்கு சாட்சியுள்ளவர்களாக ஜீவிக்க வேண்டும். ஆகவே கிறிஸ்து இயேசுவுக்குள் மறுபடியும் பிறந்த நம்முடைய  நற்கிரியைகளினால் தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும். அதுவே அவருடைய சித்தமாகவும் இருக்கின்றது. அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?