Skip to main content
கர்த்தர் உங்களோடு இருக்க வேண்டுமா?

தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார் (1 சாமு 18:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் உங்களோடு இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் புத்திமானாய் நடந்து கர்த்தரை பிரியப்படுத்த வேண்டும். அருவருப்பான, அழுக்கான, தேவனுக்குப் பிரியமில்லாத எந்த காரியங்களையும் செய்யாது, அவருக்குப் பிரியமானவற்றை மாத்திரம் செய்து அவரை உங்களுடைய வாழ்க்கையில் பிரியப்படுத்த வேண்டும். தாவீது தேவனை நேசித்தது மாத்திரமல்ல, தன்னுடைய எல்லா சூழ்நிலையிலிலும் தேவனையே சார்ந்து, அவரையே நம்பி வாழ்ந்து அவரை தன்னுடைய வாழ்க்கையில் பிரியப்படுத்தினார். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் என்று எபிரேயர் 11 : 6 இல் வாசிக்கிறோம். அல்லேலூயா ! தேவனையே, தாவீதைக் குறித்து ‘ ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்’ (அப்போ 13 : 22 )என்று சாட்சி கொடுத்திருக்கிறார். ஆகவே பிரியமானவர்களே, நாமும் தாவீதை போல் நம் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்போது, எப்படியாக தாவீதோடு கர்த்தர் இருந்து அவனுடைய வாழ்க்கையில் உயர்வையும், ஜெயத்தையும் கடடளையிட்டாரோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையிலிலும் உயர்வையும், ஜெயத்தையும் கடடளையிட அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment