கர்த்தருடைய இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது

அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார் (யோனா 3:10). ஆண்டவரும் ,இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, மகா நகரமாகிய நினிவேயில் வாழ்ந்த ஜனங்களின்  அக்கிரமத்தைக் கண்ட தேவன், தன்னுடைய தீர்க்கதரிசி யோனாவை நினிவேக்கு அனுப்பி ‘இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும்’  என்று தன்னுடைய எச்சரிப்பின் வார்த்தையை அறிவித்திருந்தார். நினிவேயை அழிப்பது தேவனுடைய விருப்பமாக இருக்கவில்லை, அவர்கள் தங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்ப வேண்டும் எனபதே அவருடைய ஏக்கமுமும் , விருப்பமுமாகவும் இருந்தது. கர்த்தருடைய எச்சரிப்பின் சத்தத்துக்கு செவி கொடுத்த நினிவேயின் ஜனங்கள், உபவாசம் இருந்து தங்களுடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று கண்ட தேவன், அவர்களை இன்னும்  நாற்பது நாட்களில் அழிப்பேன் என்று சொல்லியிருந்தும், அவர் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். அல்லேலூயா ! கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது (சங் 145:8&9). பாவிகளை அழிப்பது தேவனுடைய நோக்கமல்ல, அவர்கள் தங்களுடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கின்றது. அதனால் தான் தேவன் ‘இயேசு’ என்ற பெயரில் இந்த பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடனாகப் பிறந்து மனிதர்களுடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதல்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்றும் பரலோகத்தில் ஜீவிக்கிறார். அவர் மீண்டுமாய் இந்த பூலோகத்துக்கு வந்து அவரை விசுவாசிக்கின்ற , அவரை இரச்சகராக, ஆண்டவராக ஏற்றுக்கொண்ட, ஏற்றுக்கொண்டு ஏற்கனவே மரித்த அத்தனை பேரையும் (1தெசோ 4:16). அவரோடு பரலோகத்துக்கு அழைத்துச் செல்ல வருகிறார். அவருடைய வருகையில் நீங்களும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனபதே தேவனுடையதும், என்னுடைய விருப்பமுமாக இருக்கிறது. ஆகவே கால தாமதம் பண்ணாமல் இப்போதே இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக,  இரச்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய வருகைக்கு உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்