தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய நினைத்த நன்மையான காரியத்தை யாராலும் தடை செய்ய முடியாது

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். யோபு தேவனைக் குறித்துச் சொல்லும் போது சொல்லுகிறார் ‘ தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’ என்று. ஆம் பிரியமானவர்களே,  பல சமயங்களில் நாம் செய்ய வேண்டும் என்று நினைத்த எல்லா காரியங்களையும் எங்களால், எங்களுடைய பலத்தினால், எங்களுடைய முயற்சியினால்,  எங்களுடைய திறமையினால், எங்களுடைய அறிவினால், எங்களுடைய ஞானத்தினால், எங்களிடம் இருக்கின்ற பணத்தினால், எங்களுக்கு சமூதாயத்தில் இருக்கின்ற அந்தஸ்த்தினால், செல்வாக்கினால் எங்களால் செய்ய முடியாமல் போகின்றது. ஆனால் தேவனோ சர்வ வல்லமையுள்ளவர், சர்வ ஞானமுள்ளவர் அவரால் முடியாத காரியம் என்று சொல்ல ஒன்றுமில்லை, யோபு சொல்லுகிற பிரகாரம் தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் செய்ய நினைத்தது தடைபடாது. இப்போது உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் சித்தியாகாமல்  தடைப்பட்டு இருப்பது போல் தோன்றினாலும், நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் தேவனுடைய சித்தமாக இருக்குமானால் அந்த காரியத்தை எந்த தீய சக்தியாலும், எந்த தீய மனுஷராலும் தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய நினைத்த நன்மையான காரியத்தை தடை செய்ய முடியாது, அவர் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய நினைத்த காரியத்தைச் செய்து முடிக்க அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?