கர்த்தர் என் பட்ச்சத்தில் இருக்கும் போது மனுஷன் எனக்கு என்ன செய்வான்?

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?(சங் 118:6). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, 118 ஆவது சங்கீதத்தை யார் எழுதினார் என்பதைக் குறித்து வேத பண்டீதர்களுக்கிடையில் இரு விதமான கருத்து  வேறுபாடுகள் காணப்படுகின்றது, பெரும்பாலானோர் இந்த சங்கீதத்தை தாவீது ராஜாவே பரிசுத்த ஆவியின் உதவியுடன் எழுதியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். இந்த சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் வாழ்க்கையில் பல விதமான நெருக்கங்களுக்கூடாய், பாடுகளுக்கூடாய் கடந்து சென்றிருந்தார், அவருக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் மனுஷர்களால் நெருக்கங்கள் உண்டாயிற்று. அந்த சூழ்நிலையில் தான் அவர்  இந்த சங்கீதத்தை பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் எழுதியிருக்கிறார். அவர் சொல்லுகிறார் ‘ கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? ‘ என்று. வாவ் என்னதொரு விசுவாசம் அவர் கர்த்தரிடத்தில் வைத்திருந்தார். அவர் தேவன் மீது வைத்திருந்த விசுவாசமே அவரை அவருடைய நெருக்கமான சூழ்நிலையில் இருந்து ஜெயத்தைப் பெறுவதட்க்கு காரணமாய் இருந்தது. அல்லேலூயா ! நீங்களும் இப்படிப்பட்டதான சூழ்நிலைகூடாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறீங்களா? எல்லாப் பக்கமும் மனுஷர்களால் நெருக்கப்படுகிறீர்களா? கவலையே படாதீர்கள். தாவீதை போல் நீங்களும் கர்த்தர் மீது உங்களுடைய நம்பிக்கையை வையுங்கள், கர்த்தர் ஒருவரே எல்லா சூழ்நிலைகளிலும் நம்பத்தக்கவர். அவர் உங்கள் பட்ச்சத்தில் இருக்கும் போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும், மனுஷன் உங்களுக்கு என்ன செய்வான்? கர்த்தர் உங்களை உங்களின் நெருக்கத்தில் இருந்து விடுதலை செய்வார். வேதம் சொல்லுகிறது ‘மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் (சங் 118:6) என்று  . அல்லேலூயா ! கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும்  ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?