எங்களை நாங்கள் ஆராய்ந்து பார்த்து தேவனுக்கு முன்பாக பரிசுத்தபடுத்திக் கொள்ளுவோம்

ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள். வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும் (ஓசி 4:9-11). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்களும், தேவனுடைய கனமான ஆசாரிய ஊழியத்தைச் செய்யும் படி தேவனால் அழைக்கப்படட ஆசாரியர்களும், தங்களை  சிருஷ்டித்த, தங்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து  மீட்டெடுத்த தேவனாகிய கர்த்தரை மறந்து, அவருக்கு விரோதமாக, அவருக்குப் பிரியமில்லாத, அருவருப்பான காரியங்களான வேசித்தனத்திலும், விக்கிர ஆராதனையிலும், குடி வெறியிலும் மூழ்கி தேவனை விட்டு தூர விலகி சோரம் போயிருந்த நாட்களில்,  தேவன் தன்னுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்களையும், அவருடைய ஆசாரியர்களையும் அவர்களுடைய பாவ வாழ்க்கையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு, தேவன் தன்னுடைய தீர்க்கதரிசியான ஓசியாவின் மூலமாய் எச்சரிக்கிறார். குறிப்பாக மேலே கூறப்பட்ட வசங்களினால் ‘ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே‘ என்று தன்னுடைய ஊழியத்தைச்  செய்யும் ஆசாரியர்களை எச்சரிக்கிறார் (ஓசி 4:9-11). ஆனால் அவர்கள் தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்துக்கு செவி கொடுத்து மனந்திரும்பவில்லை ஆதலால் தேவன் அவர்களை அசிரீரியர்களின் கைக்கு ஒப்புக் கொடுக்கிறார். இன்றைக்கு, தேவன் இயேசுவின்  பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டு, பரிசுத்தமுள்ள ஜீவியம் ஜீவிக்கும் படி தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற அவருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, தேவனுக்குப் பிரியமில்லாத, அழுக்கான, அருவருப்பான, காரியங்களான விபச்சாரம், வேசித்தனம், மதுபானம், புகைத்தல், சூதாடடம், விக்கிர ஆராதனை, கீழ்ப்படியாமை, முரட்டாட்டம், பெருமை, பொறாமை, எரிச்சல், மன்னியாமல் இருத்தல், பொய், விரோதம், பகை, கசப்பு, மாயையான அன்பு போன்ற காரியங்கள் நமக்குள் இருக்குமானால், இப்போதே அந்த காரியத்துக்காக தேவ சமூகத்தில் பாவ அறிக்கை செய்து மனந்திரும்பி நம்மை பரிசுத்தப்படுத்தி தேவன் இயேசுவின் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளுவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?