தேவனே, எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்

என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும் (சங் 61:2). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது எதிரிகளினால் நெருக்கப்பட்டு அவருடைய இருதயம் கவலையினாலும், வேதனையினாலும் பாரப்பட்டு தொய்ந்திருந்த போது தேவனை நோக்கி  தாவீது விசுவாசத்தோடு ‘ பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்‘ என்று  விண்ணப்பம் பண்ணுகிறார். அவர் நன்கு அறிந்திருந்தார் அவருடைய சுய பலத்தினாலும், சுய முயற்சியினாலும் அடைய முடியாத, போக முடியாத அந்த உயரமான கன்மலைக்கு தேவனால் மாத்திரமே அவரை கொண்டு செல்ல முடியும் என்று. அல்லேலூயா ! என்னதொரு பலமுள்ள விசுவாசம் அவர் தேவன் மீது வைத்திருந்தார் என்று பாருங்கள். அவர் தேவன் மீது வைத்திருந்த விசுவாசமே அவர் வாழ்க்கையில் ஜெயிக்க காரணமாயிருந்தது. அல்லேலூயா !  பூமியின் கடையாந்தரம் என்பது ‘ தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை விட்டு விலகி வெகு தூரத்திலிருப்பதைக் குறிக்கின்றது. அவர் எதிரிகளுக்குப் பயந்து அவர்களிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதட்க்காக எருசலேமை (தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை) விட்டு விலகி ஓடி தூர தேசங்களிலும், வனாந்தரங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தான் அவர் சொல்லுகிறார் பூமியின்  கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் என்று. எப்படிப்படட இறுக்கமான, நெருக்கமான சூழ்நிலையும் அவரை தேவனிடமிருந்து பிரிக்கமுடியவில்லை. அல்லேலூயா ! தாவீதை போல் நாமும் வேதனையினாலும், துக்கத்தினாலும் நிறைந்து இருதயம் தொய்ந்திருக்கும் போது தேவனை நோக்கி விசுவாசத்தோடு பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும் என்று விண்ணப்பம் செய்வோம். தாவீதை எடடாத உயரமான கன்மலையில்  வைத்த தேவன் நிச்சயமாக உங்களையும், என்னையும் நம்முடைய பாதகமான , விரோதமான சூழ்நிலையிலிருந்து நம்மைப் பாதுகாத்து , விடுவித்து உன்னத அந்த உயரமான கன்மலையில் வைக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்