நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்

நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் (சங் 86:11 பி) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது ராஜா தன்னுடைய வாழ்க்கையில் வேதனைகளுக்கூடாகவும், பாடுகளுக்கூடாகவும் செல்லும் போது தேவனை நோக்கி அவர் ஏறெடுத்த விண்ணப்பம் தான் இந்த 86 வது சங்கீதம். தாவீது தேவனிடம் விண்ணப்பிக்கிறார் தான் கர்த்தருடைய நாமத்துக்கு பயந்திருக்கும் படி கர்த்தர் அவருடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும் படி. என்னதொரு அழகான ஜெபம். நாங்கள் ஆராதிக்கின்ற நம்முடைய தேவன் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்கும் தேவன். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. தாவீது தன்னுடைய இருதயத்தில் தேவனுக்கு மாத்திரமே இடம் கொடுக்க விரும்புகிறார், அவர் பூலோகத்தில் வாழ்ந்தாலும், தான் இந்த பூலோகத்துக்கு உரியவன் அல்ல, தான் தேவனுக்குரியவர், தான் தேவனுக்கு மாத்திரமே சொந்தமானார் என்பதை நன்கு அறிந்திருந்தார், அதனால் தான் அவர் தேவனிடம் விண்ணப்பிக்கிறார் ‘ தேவன் அவருடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும் படி. அல்லேலூயா !  இருதயம் ஒருமுகப்படும் போது இருதயத்தில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உண்டாகிறது. தாவீது தன்னுடைய முழு இருதயத்தையும் தேவனுக்கே அர்ப்பணித்து இருந்தார். அதனால் தான் தேவனே அவரைக் குறித்து சாட்சி கொடுத்திருந்தார் ‘ ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று (அப்போ 13:22). அல்லேலூயா ! ஆகவே நாமும் தாவீது ராஜாவைப் போல், தேவனை நோக்கி ‘ நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் ‘ என்று ஜெபிப்போம். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?