கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (கொலோ 3:13). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக, இரச்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய பிள்ளைகளாக இருக்கின்ற நாம் மற்றவர்களை மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் நமக்குள் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள், சண்டைகள் வருகின்றது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒருவருக்கொருவர் மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும், கிறிஸ்து நம்மை மன்னித்திருக்கிறார், நாம் பாவிகளாகயிருக்கையிலேயே அவர் நமக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்தார், கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல், நாமும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும். அல்லேலூயா ! கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டியவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் மன்னியாமல் எப்படி கர்த்தராகிய கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற முடியும்? ஆகவே ஒருவருக்கொருவர் மன்னித்து கிறிஸ்துவின் அடிச்சுவடை பின்பற்றி தேவன் இயேசுவை வாழ்க்கையில் பிரியப்படுத்துவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?