தேவன் தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நம் வாழ்க்கையில் நடப்பிக்கிறார்

தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம் (எபே 1:12). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் அவருடைய திட்டத்தின் படி, அவருடைய தீர்மானத்தின்படி நம்மை தேர்ந்தெடுத்து முன்குறித்தது மட்டுமல்லாமல், அவர் தனது விருப்பத்தின், சித்தத்தின் நோக்கத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் அவருடைய வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் செய்து முடிக்கிறார். சில சமயங்களில் நெடுநாளாய் நீங்கள் ஜெபித்து வரும் ஜெபத்துக்கு பதில் கிடைக்காததால், தேவன் உங்களைக் கை விட்டு விட்டு விட்டாரோ என்று நீங்கள் நினைக்கலாம். பிரியனானவர்களே , தேவன் உங்களுடைய பிரச்சினையில் திரைக்குப் பின்னால் செயல்பட்டு வருகிறார் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள், அவருடைய வேளையில் நிச்சயமாக நீங்கள் ஜெபிக்கிற ஜெபத்துக்குப் பதில் கிடைக்கும், உங்களுடைய பிரச்சினை நீங்கும், உங்களுக்கு எதிராக இருக்கும் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும், வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை, முன்னேற்றத்தை நீங்கள் காண்பீர்கள். அல்லேலூயா ! தேவனுக்கு எதை எப்போது வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று யாருமே ஆலோசனை கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அவர் சர்வ சிருஷ்டிகர், சர்வ ஞானமுள்ளவர். வேதம் சொல்லுகிற பிரகாரம், தேவன் தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலிலும் எல்லாவற்றையும் நடப்பிக்கிறார். அல்லேலூயா ! ஆகவே உங்களுடைய நீங்கள் கடந்து செல்லும் இந்த உபத்திரவத்தின் நாட்களில் நீங்கள் செய்ய வேண்டியது, தேவனையே முற்றும் முழுவதுமாக விசுவாசித்து, அவரில் அன்புகூர்ந்து, அவரையே சார்ந்து, அவருடைய வேளைக்காகக் காத்திருக்கும் போது, தேவன் தீமைகளையும் உங்களுடைய வாழ்க்கையில் நன்மையாக மாற்றுவார் (ரோம 8:28) . அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?