மிஷன் பாரத்தோடு வாழ்வோம்

ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் (நெகே 8:10). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் இன்றைக்கு எங்களை ஆசிர்வதித்து இருப்பது மற்றவர்களுக்கு நாங்கள் ஆசீர்வாதமாக   இருப்பதற்கு தான். இன்று நாங்கள் நல்லதொரு ஒரு வீட்டில் வசிக்கிறோம், நாமும், நம்முடைய பிள்ளைகளும் ஒவ்வொரு நாளும் விதம் விதான ஆடைகளை அணிகிறோம்,  மூன்று வேளைக்கும் மேலாக சாப்பிடுகிறோம் . ஆனால் அநேக தேசங்களில் ( ஆபிரிக்க ) ஜனங்கள் ஒரு வேளை உணவு உண்ணுவதுக்குக் கூட வசதியற்ற நிலைமையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு அணிய ஆடை இல்லாத நிலைமையில் இருக்கிறார்கள், இன்னும் அநேக தேசங்களில் (ஆப்பிரிக்கா, ஆசியா) ஜனங்கள் தண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லாமல், போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் நாளுக்கு நாள் மரிக்கிறார்கள், இன்னும் சில தேசங்களில் கல்வி கற்க கல்வி வசதிகள் இல்லை , போதுமான பாடசாலைகள் இல்லை ஆசிரியர்கள் பற்றாக்குறை , படிக்க பண வசதிகள் இல்லை , இப்படியாக தேசங்களில் ஜனங்கள் இன்று பல்வேறு தேவைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே கர்த்தர் இன்று நம்மை வாழ்க்கையில் ஆசிர்வதித்து இருப்பதன் நோக்கத்தை அறிந்தவர்களாக நம்மலால் முடிந்த, இயன்ற அளவு ஏதோ ஒரு விதத்தில், முறையில் இப்படிப்படடவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுடைய தேவைகளை நாம் சந்திப்போம். அல்லேலூயா ! நீதிமொழிகள் 19:17 சொல்லுகின்றது, ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான் என்று. மற்றும் நீதிமொழி 3: 27 சொல்லுகிறது , நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. ஆகவே கால தாமதம் பண்ணாமல் இன்றையிலிருந்து, ஒரு மிஷன் பாரத்தோடு  நன்மை செய்ய நமக்கு திராணியிருக்கும் போதே ஒன்றுமில்லாதவர்களுக்கு நம்முடைய பங்குகளை அனுப்புவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?