கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் (எபே 6:10 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் நாம் அநேக போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது, ஆகவே நமக்கு நேரிடுகிற அத்தனை போராட்டங்களிலும் நாம் ஜெயத்தைப் பெறுவதட்கு நாம் கர்த்தராகிய இயேசுவிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட வேண்டியதாய் இருக்கின்றது. கர்த்தரே நமது பெலன், அவர் ஒருவரே நமக்குப் போதுமானவர். நாம் வாழ்க்கையில் போராட்டங்களை சந்திக்கும் போது அவற்றை மேட்கொண்டு முன்னேறிச் செல்வதட்க்கு கர்த்தருடைய பெலன் நமக்குத் தேவைப்படுகின்றது. அதனால் தான் தேவனுடைய வசனம் நம்மை உட்ச்சாகப்படுத்துகிறது ‘கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்’ என்று. கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் நாம் பெலப்படும் போது நாம் நமக்கு ஏட்படுகின்றதான போராட்டத்தில் ஜெயத்தைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்