உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய் 1 : 7 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு சரித்திர பின்னணி தெரிந்ர்த்திருக்க வேண்டும். ஆகவே சரித்திரத்தை சுருக்கமாக உங்களுக்கு சொல்லிவிட்டு, இந்த வேத வசனத்தின் மூலமாய் தேவன் நமக்கு என்னத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளுவோம். அல்லேலூயா ! இதுவரை சமஸ்த இஸ்ரவேலாக இருந்த இஸ்ரவேல் தேசம் சாலமோனின் புதல்வன் ரெகொபெயாமின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் தேசம், யூதா தேசம் என இரண்டாக பிளக்கப்படுகிறது. இப்போது இஸ்ரவேல் தேசம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறது, தேவன் அவர்களை அசீரியர்களின் கைக்கு ஒப்புக்கொடுக்கிறார், அவர்கள் இஸ்ரவேலர்களை சிறைப்பிடித்துக்கொண்டு தங்கள் தேசத்துக்கு எடுத்துச் செல்லுகிறார்கள். அதன் பிறகு யூதா தேசமும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள், கர்த்தர் அவர்களை எச்சரிக்கிறார், ஆனால் அவர்கள் கர்த்தரின் எச்சரிப்பின் சத்தத்துக்கு செவி கொடுத்து மனந்திரும்பாத பட்ச்சத்தில், எப்படியாக கர்த்தர் இஸ்ரவேல் மக்களை அந்நியர்களின் கைக்கு ஒப்புக்கொடுத்தாரோ அதே போல் யூதா மக்களையும் அந்நியனான பாபிலோனின் கைக்கு ஒப்புக்கொடுக்கிறார் அவன் இவர்களை சிறைப்பிடுத்துக்கொண்டு தங்கள் தேசத்துக்கு அழைத்துச் செல்லுகிறான், சுமார் 70 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு யூதா மக்களில் சிலர் மேசியா பெர்சிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் தங்களுடைய தேசம் யூதாவுக்கு செருபாபேல் தலைமையில் இடிக்கப்பட்டு கிடக்கின்ற தேவனின் ஆலயத்தை கட்டுவதட்க்கு வருகிறார்கள், ஆலய கட்டுமான பணியும் ஆரம்பிக்கப்படுகிறது, ஆனால் இப்போது இவர்களுக்கு ஆலயத்தைக் கட்டுவதுக்கு எதிர்ப்புக்கள் , தடைகள் வருகின்றது, இவர்களும் ஆலயத்தைக் கட்டுவதை நிறுத்தி விட்டு அந்நியர்களோடு நெருங்கிப் பழகி அவர்களோடு கலப்புத் திருமணம் செய்து கொண்டு தாங்கள் செய்ய வந்த பணியை மறந்து விட்டு, தங்களுடைய சொந்த குடும்பத்தை கடட ஆரம்பிக்கிறார்கள், ஆதலால் இவர்கள் செய்த பாவத்தின் நிமிர்த்தம் தேவன் அவர்களை இந்த முறை அந்நியர்களின் கைக்கு ஒப்புக்கொடுக்காமல், அவர்கள் கையிட்டுச் செய்யும் வேலைகளில் தன்னுடைய ஆசீர்வாதங்களை கொடுப்பதை நிறுத்தி விடுகிறார், அவர்கள் விதைக்கும் விதையிலே அவர்களுக்கு கர்த்தருடைய ஆசிர்வாதம் கிடைக்கவில்லை , வாழ்க்கையில் குறைவு உண்டாகிறது. ஆனால் ஏன் தங்களுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய ஆசிர்வாதம் அவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப்பார்க்கவில்லை, இந்த வேளையில் தான் சேனைகளின் கர்த்தர் தன்னுடைய ஜனங்களுக்கு ஆகாய் தீர்க்கதரிசியின் மூலமாய் ‘ உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்’ என்று அவர்கள் தங்களுடைய பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பும் படி அவர்களை எச்சரிக்கிறார். அல்லேலூயா! யூதா ஜனங்களை போல், நம்முடைய வாழ்க்கையிலும் குறைவுகள் , கர்த்தருடைய நிறைவான ஆசிர்வாதம் இல்லாவிடில், நாமும் நம்முடைய வழிகளை சிந்தித்துப்பார்த்து ஏதாவது பாவங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்குமானால் மனந்திருப்ப வேண்டியது அவசியமாய் உள்ளது. கர்த்தர் நம்மை இரட்சித்ததன் நோக்கத்தை அறிந்தவர்களாக நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், கர்த்தருடைய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் நம்மை அழைத்த அழைப்பை இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டும். அதாவது இருளில் இருக்கும் ஜனங்களை தேவன் இயேசுவுக்குள்ளாக வழிநடத்தி தேவனுடைய ராஜ்யத்தை இந்த பூமியில் கட்டுவதே நம்முடைய பிரதான பணி. யூதா ஆலயத்தைக் கட்டுவதை மறந்து விடடது போல், நாமும் நம்முடைய அழைப்பை மறக்காமல் , உலகப்பிரகாரமான காரியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தி விட்டு, தேவனுடைய ராஜ்யத்தை கட்டுவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Comments
Post a Comment