கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருங்கள்

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது (புல 3:25&26). ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, பாபிலோன் தேசத்துக்கு சிறைக்கைதிகளாக கொண்டு செல்லப்படட யூதா ஜனங்கள் அங்கே பலவிதமான பாடுகளுக்கூடாகவும், வேதனைகளுக்கூடாகவும் சென்று கொண்டிருந்த போது, கர்த்தருடைய தீர்க்கதரிசி எரேமியா அவர்களுக்கு (யூதா ஜனங்களுக்கு) அவர்களுடைய இந்த நெருக்கமான சூழ்நிலையில் கர்த்தரை மறந்து விடாமல் அவர் மீது விசுவாசம் வைத்து அவரைத் தேடும்படியாகவும், அவருக்காகக் காத்திருக்கும் படியாகவும், அவருக்காகக் காத்திருப்பவர்களுக்கும், அவரைத் தேடுபவர்களுக்கும் கர்த்தர் நல்லவராக இருக்கிறார் என்றும், அவர்களை கர்த்தர் தன்னுடைய வேளைகளில் அவர்களுடைய நெருக்கமான சூழ்நிலையில் இருந்து விடுதலை செய்து அவர்களை இரட்சிப்பார் , அவர்களை பாதுகாப்பார் என்று கூறுகிறார். ஆம் பிரியமானவர்களே, உங்களையும் கர்த்தர் உங்களுடைய நெருக்கமான சூழ்நிலையிலிருந்து விடுதலை செய்யும் வரை நீங்களும் கர்த்தர் மீது நம்பிக்கையோடு விசுவாசம் வைத்து அவரைத் தேடி, அவருடைய வேளைக்காகக் காத்திருக்கும் போது கர்த்தர் உங்களையும் உங்கள் நெருக்கமான சூழ்நிலையிலிருந்து விடுதலை செய்து உங்களைப் பாதுகாப்பார். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்