Skip to main content
கர்த்தரின் வல்லமையும், பெலமும்

இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது (யோபு 12:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, யோபு தேவனுடைய மகத்துவங்களைக் குறித்து அவருடைய வல்லமைகளைக் குறித்து அவருடைய கிரியைகளைக் குறித்து தன்னுடைய சிநேகிதரிடத்தில் பேசும் போது சொல்லுகிறார், தேவன் இடித்தால் எந்த மனுஷனாலும், எந்த சக்தியினாலும் கட்ட முடியாது என்றும், அவர் ஒரு மனுஷனை அடைத்தால் எந்த மனுஷனாலும், எந்த சக்தியினாலும், எந்த வல்லமையினாலும் அவனை விடுவிக்கமுடியாது என்றும் கூறுகிறார் அல்லேலூயா ! அவ்வளளவு பெரிய தேவன் நம்முடைய தேவன், அவருடைய செயல்களை விபரித்து சொல்லுவதட்கு வார்த்தைகள் போதாது. அந்த சர்வ வல்லமையுள்ள தேவன் இயேசுவை தேவனாகக் கொண்ட அத்தனை ஜனங்களும் பாக்கியவான்கள். அல்லேலூயா ! பிரியனானவர்களே, ஒருவேளை நீங்கள் ஆண்டவராகிய இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளாதிருப்பீர்களானால் இப்போதே கால தாமதம் பண்ணாமல் அவருக்கு உங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணியுங்கள், அவர் மனித குலத்தை அவர்களுடைய பாவங்களிருந்து, அக்கிரமங்களில் இருந்து மீட்டு எடுப்பதட்காக அவருடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்தவர். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment