Skip to main content
எதையாகிலும் தேவனுடைய சித்தத்தின்படி கேளுங்கள்
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1யோவா 5:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, முதலில் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் ‘தேவனுடைய சித்தம்’ என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும், அதன் பிறகு நீங்கள் அவருடைய சித்தத்தின்படி அவரிடத்தில் குறித்த காரியத்துக்காக இயேசுவின் நாமத்தின் மூலமாய் விசுவாசத்தோடு விண்ணப்பம் பண்ண வேண்டும். அவ்வாறு நீங்கள் எதையாகிலும் அவரிடத்தில் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் , அவர் உங்களுக்கு செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கும் அந்த விசுவாசமே கர்த்தரிடத்தில் நீங்கள் கொண்டிருக்கிற ‘ தைரியம் ‘ அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே , இன்றையிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் தேவனிடத்தில் ஜெபத்தில் கேட்கலாம் என்று நினைக்காமல், முதலில் தேவனுடைய சித்தத்தை உங்களுடைய வாழ்க்கையில் அறிந்து, அவருடைய சித்தத்தின் படி அவரிடத்தில் இயேசுவின் நாமத்தின் மூலமாய் கேளுங்கள். அவ்வாறு நீங்கள் தேவனுடைய சித்தத்தை உங்களுடைய வாழ்க்கையில் அறிந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாய் தேவனிடத்தில் ஏறெடுக்கும் ஒவ்வொரு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தேவன் அங்கீகரிக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment