பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், எப்படி நடத்தவேண்டும்

அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான் (நியா 13:12) ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இங்கே ஒரு தகப்பன் (மனோவா) தங்களுக்கு பிறக்க போகும் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் , எப்படி நடத்த வேண்டும் என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்க்கின்றான். ஆம் பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது , பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் ( சங் 127 ) என்று.  உலகத்தில் எத்தனை பேருக்கு பிள்ளைகள் இல்லாமல் இருக்கிறார்கள் , ஆனால் இன்று தேவன் எங்களை பிள்ளைகள் செல்வத்தினால்  ஆசிர்வதித்து இருக்கார். ஆகவே தேவன் எங்களுக்கு கொடுத்த பிள்ளைகளுக்காக, அவருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்தி , மனோவா போல், பெற்றோராகிய நாங்கள் ஒவ்வொருவரும் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்று தேவனிடம் ஆலோசனையைப் பெற்று, அவர்களை அவருடைய ஆலோசனையின் படி நடத்தி தேவன் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் வைத்திருக்கிற சித்தத்தை, திட்டத்தை, நோக்கத்தை நிறைவேற்றுவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?