புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம் (கலா 2:15). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் தான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார், ஆனால் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் சொல்லுகிறார் , நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் தான் நீதிமானாவதில்லை என்றும் இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே தான் நீதிமானாக்கப்படுவதாகவும் சொல்லுகிறார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (ஆதி 15:6 ,ரோம 4:3 & கலா 3:6) என்று வாசிக்கிறோம். ஆகவே ஒருவன் இயேசு கிறிஸ்த்துவை விசுவாசிப்பானால் அதுவே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க தன்னையே பாவ நிவாரணப் பலியாகச் செலுத்தியிருக்கிறார், மனிதனை மீட்பதட்க்கு தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்ப்பின் கிரயமாக அவர் செலுத்தியிருக்கிறார், மனுஷனுடைய இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறொரு பலி தேவையில்லை. ஆகவே பிரியமானவர்களே, இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசமே ஒருவனை நீதிமானாக்கும் என்பதை விசுவாசித்து, தேவன் இயேசுவை உங்கள் வாழ்க்கையில் இரச்சகராக, ஆண்டவராக ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment