கர்த்தரே என் பெலன், கன்மலை, கோட்டை, இரட்சகர், அடைக்கலம், துருகம்

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார் (சங் 18 :1- 2 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது எதிரிகளினால் நெருக்கப்படும் போது கர்த்தர் தாமே தாவீதுக்கு நல்ல அடைக்கலமாக, பாதுகாப்பாக இருந்து அவருக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுத்திருந்தார். அதனால் கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வண்ணமாக தாவீது இந்த சங்கீதத்தை இயற்றியிருக்கிறார். இந்த சங்கீதத்தில் அவர் பயன்படுத்தியிருக்கிற ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்க்கையில் யாராவது நெருக்கங்களுக்கூடாக கடந்து செல்லும் போது அவர்களை பெலப்படுத்துகிற, உட்ச்சாகப்படுத்துகிற, அவர்களை விசுவாசத்தில் வர்த்திக்கப் பண்ணுகிற   வார்த்தைகளாக இருக்கின்றன. அல்லேலூயா !  நாமும் தாவீதைப் போல் கர்த்தரை உண்மையாக நேசித்து, நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை துதிக்கும் போது தாவீது பயன்படுத்தியிருக்கிற இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். கர்த்தர் ஒருவரே நம் ஒவ்வொருவருக்கும்  பெலனாக, கன்மலையாக, கோட்டையாக, இரச்சகராக, அடைக்கலமாக, துருகமாக, கேடகமாக, இரட்சணியக் கொம்பாக, உயர்ந்த அடைக்கலமாக இருக்கிறார். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்